தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை,சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக , பெரும்பாலான மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர்,மதுரை,சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.