அரசியல்தமிழ்நாடு

கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்து மு.க. ஸ்டாலின் தமிழில் கடிதம்…

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், கமலா ஹாரிஸ் , அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு தமிழ்ப்பெண், அமெரிக்காவையும் ஆளத் தகுதி படைத்தவர் என்பதை, கமலா ஹாரிசின் கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது எனவும், அவரது ஆட்சிக் காலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து, தமிழர் தம் பாரம்பரியப் பெருமையை உலகுக்குப் பறை சாற்றுவதாக அமையட்டும் என கடிதத்தில் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.