விளையாட்டு

15 வயதுக்குட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 12 வயது எகிப்திய சிறுமி முதலிடம்

15 வயதிற்குட்பட்டவர்களுக்கான டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் எகிப்தைச் சேர்ந்த சிறுமி உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

12 வயது நிரம்பிய ஹனா கோடா என்ற சிறுமி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதை லட்சியமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு எகிப்து தேசிய சாம்பியனான 27 வயது ஃபரா அப்தெலாசிஸுடன் விளையாடி ஆச்சரியப்படுத்தினார்.

4 வயது முதல் விளையாடி வரும் ஹனா, சேலஞ்ச் – ஐடிடிஎஃப் உலக கோப்பை போட்டிகளில், மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.