சினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் பல மாதங்களுக்கு பிறகு நாளை திரையரங்குகள் மீண்டும் திறப்பு : ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு நாளை திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், திரைப்படங்களை காண்பதற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட திரையரங்குகளை நாளை முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

விபிஎப் விவகாரத்தால் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என திரைப்பட உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த திரைப்படங்கள், பிற மொழி படங்களை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அந்த படங்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.