தமிழகம் முழுவதும் நாளை முதல் 14,757 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு வரும் 3 நாட்களுக்கு 14 ஆயிரத்து 757 சிறப்பு பேருந்துகளும், சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 9 ஆயிரத்து 510 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் பேருந்தில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததாலும், தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களில் இருந்து பணியாற்றுவதாலும் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.