சினிமாதமிழ்நாடு

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

அவருடைய தந்தையும், மூத்த திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய்யின் பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். அந்த கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.

இதேபோல் விஜய்யின் தாயாரும், அக்கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்துக்கு மக்கள் இயக்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று வந்துள்ளனர். அவர்களுடன் விஜய் சிறிது நேரத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறார்.