இந்திய பங்குச்சந்தை நிலவரம்
பங்கு சந்தை வர்த்தகத்தில், மும்பையின் சென்செக்சும், தேசிய பங்கு சந்தை நிப்டியும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளன.
பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளின் துவக்கம், அதிகரிக்கும் பணப்புழக்கம் உள்ளிட்டவற்றால் பங்கு சந்தை ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.
வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பெட்ரோலியம் ஆகிய துறைகளின் பங்குகள் உயர்ந்தன.
சென்செக்ஸ் 705 புள்ளிகள் உயர்ந்து 43 ஆயிரத்து 302 புள்ளிகளிலும், நிப்டி 176 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 637 புள்ளியிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.