அரசியல்தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய மு.க.ஸ்டாலின் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் ஆதாயத்திற்காக அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வருகிற 16-ம் தேதி வெளியிடப்பட்டு, ஓரிரு நாளில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.