தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழக கடலோரம் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், நாளை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.