வரி வருவாய் பற்றாக்குறை நிதியுதவித் திட்டத்தின் கீழ் 14 மாநிலங்களுக்கு நிதிக்குழு பரிந்துரையின்படி நிதியுதவி – அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
வரி வருவாய் பற்றாக்குறை நிதியுதவித் திட்டத்தின் கீழ், 15 ஆவது நிதிக்குழுவின் இடைக்கால பரிந்துரையின்படி, 14 மாநிலங்களுக்கு மொத்தம் 6,195 புள்ளி 08 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 8 மாதாந்திர தவணைகளாக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த வகையில் தமிழகத்திற்கு சுமார் 335 கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.