தமிழ்நாடு

தணிகாச்சலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சித்த மருத்துவர் என கூறிக்கொள்ளும் தணிகாச்சலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் கூறி சமூக ஊடகங்களில் தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து, தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையயடுத்து தணிகாச்சலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்