தமிழ்நாடு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வரும் முதலமைச்சர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் செல்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விருந்தினர் மாளிகை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தற்போது 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.