வணிகம்

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புதிய உச்சம்…

மும்பை பங்குச்சந்தையில் வணிகம் ஏற்றமடைந்ததால் பங்குவிலைக் குறியீட்டெண் சென்செக்ஸ் இதுவரை இல்லா வகையில் 43 ஆயிரத்து 642 என்கிற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுப் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்துள்ளதால் இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம் கண்டு வருகிறது. இன்று பத்து மணி அளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டெண் புதிய உச்சத்தை எட்டியது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டெண் நிப்டி 131 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 762 ஆக இருந்தது. நிதிநிறுவனங்கள், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குவிலை 5 விழுக்காடு வரை உயர்ந்தன.