அரசியல்தமிழ்நாடு

துரைக்கண்ணு அவர்களின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவது கீழ்த்தனமான அரசியல் – அமைச்சர் ஜெயக்குமார்

துரைக்கண்ணுவின் குடும்பத்தாரிடமும் அவரைச் சார்ந்தவர்களிடமும் எந்தவிதமான சோதனையோ விசாரணையோ நடத்தப்படவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, துரைக்கண்ணு வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அவரைச் சார்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுவது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், துரைக்கண்ணுவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவது கீழ்த்தனமான அரசியல் எனத் தெரிவித்தார் .