அரசியல்தமிழ்நாடு

இலங்கையில் சேதமடைந்த படகுகளை விற்பனை செய்து அந்த தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஜெயக்குமார்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் சேதமடைந்த படகுகளை விற்பனை செய்து அந்த தொகையினை உரிமையாளர்களுக்கு வழங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தினை கேட்டுக் கொண்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் பிடிக்கப்பட்டு இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 165 படகுகளில் மீட்கும் நிலையில் இருந்த 36 விசைப்படகுகள் அரசு செலவில் சரிசெய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மோசமான வானிலையால் 4 படகுகள் கொண்டு வரமுடியவில்லை.

மீட்க இயலாத 125 படகுகளை அரசு விற்பனை செய்து அந்தத் தொகையினை தங்களுக்கு வழங்கிட உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் இலங்கையிலுள்ள இந்திய தூதரக பிரதிநிதிகள் படகுகளை ஏலம் மூலம் விற்பனை செய்யகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.