உலகம்

காட்டுக்குள் கெத்தாக நடைபோட வேண்டிய சிங்கம் உயிரியல் பூங்காவில் எலும்பும் தோலுமாக சோகநடை போட்டு வருகிறது.

நைஜீரியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கத்தைக் கண்டு பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடுனா என்ற இடத்தில் உள்ள காம்ஜி கேட் விலங்கியல் பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிங்கம் ஒன்று எலும்பும் தோலுமாக இருப்பதை பார்வையாளர்கள் ஒருவர் படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் போதிய உணவின்மையால் இதுபோல பல உயிரினங்கள் அங்கு இருப்பதாகவும் அவற்றை மீட்க வேண்டும் என்றும் உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.