டிஜிட்டல் நியூஸ் மற்றும் OTT தளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்தன – மத்திய அரசின் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர்
ஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி – ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
கடந்த மாதம் OTT தளங்களை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர தன்னாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .
இதையடுத்து அதை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு அரசு மற்றும் இன்டர்நெட் – மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை வெளியிடும் ஓடிடி தளங்களை செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.