தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழவதும் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக தமிழகம் முழுவதும் 14 ஆயிரத்து 757 சிறப்பு பேருந்துகளும் சென்னையில் இருந்து 9 ஆயிரத்து 510 சிறப்பு பேருந்துகளும் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன.

இதன் பொருட்டு காலை முதலே பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் வர தொடங்கிய நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பேருந்துகளில் ஏற அனுமதி வழங்கப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று 225 பேருந்துகளும், நாளை ஆயிரத்து 705 பேருந்துகளும், நாளை மறுநாள் ஆயிரத்து 500 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.