தமிழ்நாடு

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதற்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், நல்லாட்சி வளர்ச்சியை நோக்கிய அரசுக்கு வழிவகுக்கும் என்றும், பீகார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தங்கள் ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பீகார் மக்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.