வணிகம்

(12-11-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4,764 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹12 குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹38,112-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 96 குறைந்து ₹38,016-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 66.90 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.10 உயர்ந்து ₹ 67.00 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்றும் தங்கம் விலை உயர்ந்தது . இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 39,000 கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து தற்போது சவரன் ₹38,016-க்கு விற்பனையாகிறது.