பாஸ்டேக் மூலம் நாளொன்றுக்கு ரூ.70 கோடி வசூல் – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் மூலம் தினசரி 75 கோடி ரூபாய் வசூலாவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், பாஸ்டேக்குகளின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, மின்னணு கட்டண வசூல் முறை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதில் தினசரி வசூல் 92 கோடி ரூபாயில் தற்போது 80 விழுக்காடான 70 கோடி ரூபாய் வரை வசூலாவதாகவும் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் முறை கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.