அரசியல்இந்தியா

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தான் – பிரதமர் மோடி அறிவிப்பு

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தான் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ள போதிலும், அமைச்சரவையில் அதிக இடங்கள் வேண்டும் என பாஜக கோரும் எனக் கூறப்படுறது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. நிதிஷ்குமாரின் தலைமையில் பீகாரில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் அமைச்சரவையில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என பாஜக கோரும் வாய்ப்புள்ளது.