தமது நீண்ட நாள் உதவியாளரான ரோன் கெயினை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக நியமித்தார் ஜோ பைடன்
தமது நீண்ட நாள் உதவியாளரான ரோன் கெயின் என்பவரை, வெள்ளை மாளிகை பணியாளர் தலைமை அதிகாரியாக ஜோ பைடன் நியமித்துள்ளார்.
இந்த பணியில், அதிபரின் செயல் அலுவலகத்தின் மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன், அதிபரின் செனட் ஆலோசகராகவும் ரோன் கெயின் செயல்படுவார்.
முக்கிய பிரச்சனைகளில் புதிய அதிபரான ஜோ பைடனுக்கும், துணை அதிபரான கமலா ஹாரிசுக்கும் உதவக் கூடிய திறமையாளர்கள் குழுவையும் ரோன் கெயின் ஏற்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 மற்றும் 2014 ல் ஏற்பட்ட பொருளாதார, சுகாதார நெருக்கடி காலக்கட்டங்களில் ரோன் கெயின் சிறப்பாக பணியாற்றியவர் என ஜோ பைடன், ரோன் கெயினை பாராட்டி உள்ளார்.