இந்தியா

புதிய அதிகாரச் சமநிலையை நோக்கி உலகம் செல்கிறது – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதிய அதிகாரச் சமநிலையை நோக்கி உலகம் செல்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், கொரோனா பெருந்தொற்று உலகில் ஒரு சிக்கலான காரணியாகச் செயல்பட்டுள்ளதாகவும், இதனால் புதிய அதிகாரச் சமநிலையை நோக்கி உலகம் செல்வதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் செப்டம்பர், அக்டோபர் மாதப் பொருளாதாரப் புள்ளி விவரங்கள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது மேலும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

வேளாண்மை, தொழிலாளர், கல்வி, மின்னாற்றல் ஆகிய துறைகள் ஏற்கெனவே வளர்ச்சிப் பாதையை அடைந்துள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.