இந்தியா

இந்தியாவில் மீண்டும் வருகிறது PUBG விளையாட்டு..!

இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்றே தனித்துவமான PUBG Mobile India என்ற விளையாட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தென் கொரியாவின் PUBG கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

PUBG க்கு அடிமையாகி பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை முற்றிய பின் கடந்த மாதம் அதை தடை செய்வதாக இந்தியா அறிவித்தது.

இந்த நிலையில் இந்திய கலாச்சாரத்திற்கு பொருத்தமான கேரக்டர்களுடன், நாகரீகமாகவும், பாதுகாப்பானதாகவும் PUBG விளையாட்டை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் PUBG விளையாட்டை நிர்வகிக்க சுமார் 740 கோடி ரூபாய் முதலீட்டில் தனியாக துணை நிறுவனம் துவக்கப்படும் எனவும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.