அரசியல்தமிழ்நாடு

தமிழகம் – கர்நாடகம் இடையே வருகிற 16 ஆம் தேதிக்கு பின்னரும் பேருந்து சேவை தொடர அனுமதி

தமிழகம், கர்நாடகம் இடையே பேருந்து சேவையை தொடர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்திகுறிப்பில், தீபாவளியை ஒட்டி வருகிற 16-ஆம் தேதி வரை கர்நாடகம்- தமிழகம் இடையே பேருந்து சேவைக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகிற 16 ஆம் தேதிக்கு பின்னரும் பேருந்து சேவையை தொடரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 16 ஆம் தேதி முதல் தமிழகம், கர்நாடகம் இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.