அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க உத்தரப்பிரதேச அரசு திட்டம்
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தீபாவளிக்குப் பின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டத்தின்படி அரசுத் துறைகள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசின் ஒவ்வொரு துறையிலும், நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு உதவி மையம் உருவாக்கப்பட உள்ளது.