இந்தியா

நடப்பாண்டில் 4,052 முறை எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

நடப்பாண்டில் இதுவரை நான்காயிரத்து 52 முறை பாகிஸ்தான் அத்துமீறி, எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 3,233 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறிய நிலையில், கொரோனா காலகட்டத்தில் அதன் ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடந்த ஊடுருவல் முயற்சியின் போது,11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.