சினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள்

கரோனா அச்சுறுத்தலால் 7 மாதங்களுக்குப் பிறகு, தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

விபிஎஃப் கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே கடும் மோதல் நீடித்ததால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், பழைய திரைப்படங்களே திரையிடப்பட்டன.

இதையடுத்து, நவம்பர் மாதத்திற்கு வி.பி.எஃப் கட்டணத்தை கட்டத் தேவையில்லை என க்யூப் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், தீபாவளிக்கு 5 புதிய திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன.

நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் பிஸ்கோத்து, அடல்ட் காமெடியான இரண்டாம் குத்து, மரிஜுவானா, தட்றோம் தூக்குறோம் உள்ளிட்ட ஐந்து திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.