தமிழகத்தில் இன்று 1,819 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் இன்று புதிதாக ஆயிரத்து 1,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, ஒற்றை இலக்கத்திற்கு குறைந்தது.
தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 2 ஆயிரத்து 520 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நிலையில், பெருந் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில், கணிசமாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக 502 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.