டெல்லியில் தீபாவளியன்று காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டியது
டெல்லியில் காற்றின் மாசுபாடு தீபாவாளியன்று மிகவும் மோசமானதாக இருந்தது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்தை விட 32 சதவீதம் கூடுதலாக காற்று மாசு அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதன் காரணமாக காற்றின் மாசு குறையக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கு டெல்லி மாநகராட்சி பணியாளர்கள் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.