தமிழ்நாடு

தனுசு ராசியில் இருந்து இன்று இரவு 9.40 மணி அளவில் மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன .

நவக்கிரகங்களில் முக்கிய கிரகம் மற்றும் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான் இன்று இரவு 9.40 மணியளவில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆனார் .

இதையொட்டி குருபரிகார தலமாக விளங்கும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தழுளியுள்ள குருபகவானுக்கு குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நேற்றிரவு தொடங்கின. தொடர்ந்து முதல்கால யாகபூஜை முடிந்து தீபாராதனை நடைபெற்றது.