தமிழ்நாடு

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக் கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி தமிழக கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக இன்று தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனிடையே இன்று அதிகாலையில் சென்னையில் பரவலாக மழைபெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையினால் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. புறநகர் பகுதிகளில் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் ஓடியது.