ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கினர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் முதலிரண்டு வாரங்கள் தனிமையில்தான் இருக்க வேண்டும்.
சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக நவம்பர் 27,29 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.