தமிழ்நாடு

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைப்பதோடு, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட அரசு செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களுக்கும் அரசிற்கும் பாலமாக பத்திரிகை துறை செயல்படுவதாக புகழ்ந்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இருள் நீக்கி ஒளி தருதல் மட்டுமல்ல, அந்த ஒளியை பேதம் இல்லாமல் வழங்கும் துறை தான் பத்திரிக்கைத் துறை என புகழ்ந்துள்ளார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று பத்திரிகைத் துறை சொல்லப்படுகிறது எனவும், பலநேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பும் பத்திரிகைத் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும்தான் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.