இந்தியா

ஜைன துறவியின் சிலையை அமைதியின் சின்னமாக நாளை திறந்து வைக்கிறா பிரதமர் மோடி

ஜைன துறவி ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப சுரீஷ்வரின் சிலையை அமைதியின் சின்னமாக நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

அவருடைய 152 வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் பாலியில் நடைபெறும் கொண்டாட்டத்தின் இடையே 151 அங்குலம் உயரமான சிலையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாகத் திறந்துவைப்பார்.

பகவான் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி தொண்டு புரிந்து தூய்மையான ஆன்மீக வாழ்வை வாழ்ந்த துறவிக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த இருப்பதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.