தமிழகத்தில் புதிதாக 1,725 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 1,725 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,725 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,384 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,32,656 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய அறிவிப்பில் மேலும் 17 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11,495 பேர் பலியாகியுள்ளனர்.