சினிமா

பிக்பாஸ் லாஸ்லியாவின் அப்பா திடீர் மரணம்…பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்தவரான இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக அவரது தந்தை மரியநேசன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ‘பிரெண்ட்ஷிப்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஆரி அர்ஜூனா நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் லாஸ்லியா.

லாஸ்லியாவின் தந்தை மாறியநேசன் வெளிநாட்டில் உள்ள நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு லாஸ்லியாவை சந்திக்க அவர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தார். அப்போது லாஸ்லியா கண்ணீர் விட்டு பாச மழை பொழிந்தது நிகழ்ச்சியினை பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கும்.

இந்நிலையில், மரியநேசன் உயிரிழந்த செய்தி, லாஸ்லியாவின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் சேரன் , லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியாவின் ரசிகர்கள் பலருக்கும் இந்த செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. பலரும் ட்விட்டரில் பிக்பாஸ் வீட்டில் அவரது தந்தை உள்ளே வந்த வீடியோகளையும், அவரது புகைப்படங்களையும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.