உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் வெனிசுலா அணியை வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணி வெனிசுலாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதில் சாவ்பாலோ நகரில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது.
முடிவில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை பிரேசில் பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் பிரேசில் 9 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பிரேசில் அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் உருகுவேயை சந்திக்கிறது.