அரசியல்தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் : இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வரைவு வாக்காள பட்டியல் இன்று வெளியாகிறது.

2021 ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, இன்று காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடுகிறார்.

இந்த வரைவு பட்டியலில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெயர் சேர்க்க, நீக்க விரும்புவர்கள், திருத்தம் செய்ய விரும்புவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.