அரசியல்இந்தியாதமிழ்நாடு

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

பீகார் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற நிதீஷ்குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அண்மையில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் எல்எல்ஏக்கள் கூட்டத்தில், நிதீஷ்குமாரை மீண்டும் முதலமைச்சராக்குவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது . இதன்படி, நிதீஷ் குமார் தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்றார்.

இந்நிலையில் நிதீஷ் குமாருக்கும் , அவரது அமைச்சரவையில் இடம்பெறும் பிற அமைச்சர்களுக்கும் ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இதனிடையே, நிதீஷ்குமாருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தங்களது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.