தமிழ்நாடு

ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு

நகர்ப்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைக்க, தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இயற்கைச் சீற்றங்களாலும், குடிநீர்-வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட வகையிலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பராமரிப்பில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டியுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 11 ஆயிரம் கிலோமீட்டர் நகர்ப்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைக்க வேண்டியிருப்பதாகவும், இதற்கான கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து 1000 கோடி ரூபாய், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன்பெற்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.