அரசியல்உலகம்

“நானே வெற்றி பெற்றேன்” – டிரம்பின் அதிரடி ட்வீட்.!

அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்று விட்டதாக டிரம்ப் வரிசையாக டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

முதலில் தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், பின்னர் மெதுவாக அதிலிருந்து பின்வாங்கி எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என விரக்தியாக பேசினார். எனவே, தோல்வியை அவர் ஒப்புக் கொண்டு விட்டார் என கருதப்பட்டு, அதிகார மாற்றத்திற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டன.

இந்நிலையில் திடீரென, பொய் செய்திகளை வழங்கும் ஊடகங்களால், ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் வெற்றி பெற்றது தாமே என்றும் டிவிட் பதிவுகளை வெளியிட்டு டிரம்ப் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.