வருண் சக்கரவர்த்தியின் கனவு நிறைவேறியது : நடிகர் விஜய்யுடன் வைரலாகும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படம், டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல் போட்டிகளில், கொல்கத்தா அணிக்காக விளையாடிய வருண் சக்கரவர்த்தி, அண்மையில் நடைபெற்ற போட்டியொன்றில், 20 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி, “தலைவா” படத்தின் விஜய் கெட்டப்பை, தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில், தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், நடிகர் விஜய்யை, வருண் சக்கரவர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை, வருண் சக்கரவர்த்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், பகிர்ந்துள்ளார்