அரசியல்உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தானே வென்றதாக டிரம்ப் மீண்டும் ட்வீட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் தானே வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் மீண்டும் ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தொடக்கத்தில் இருந்தே அதிபர் டிரம்ப் எதிர்மறைக் கருத்துக்களைக் கூறி வருகிறார். ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்துள்ள அவர், தொடர்ந்து தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பென்சில்வேனியா மாகாணத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், 2020 அதிபர் தேர்தலில் தானே வென்றதாக மீண்டும் பதிவிட்டுள்ளார்.