அரசியல்இந்தியா

குறைந்த விலை கொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை எதிர்பார்க்கிறது”- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் !

குறைந்த விலை கொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதுமுதல் இந்தியா பல நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைத்து உதவி செய்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான வேலைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் குறைந்த விலை கொரோனா தடுப்பூசியை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடியும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகம் இக்கட்டான சூழலில் இருக்கும் போது அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி உருவாக்கும் சர்வதேச முயற்சிகளின் மையப்புள்ளியில் இந்தியா இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.