தமிழ்நாடு

ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நோவக் ஜோகோவிச் வெற்றி…

ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரராரன நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மோதும், இந்த தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றுப் போட்டியில், 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-2 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில், நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவை, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.