குற்றம்தமிழ்நாடு

பழனியில் நிலம் தொடர்பான பிரச்சனையில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு : துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிலம் தொடர்பான பிரச்சனையில் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி அருகே உள்ள அக்கரைப்பட்டியை சேர்ந்த இளங்கோவனுக்கும், பழனி அப்பர் தெருவை சேர்ந்த தியேட்டர் அதிபர் நடராஜனுக்கும் இடையே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்தது.

இது தொடர்பான தகராறில், நடராஜன் நேற்று திடீரென துப்பாக்கியால் சுட்டதில் பழனிசாமி, சுப்பிரமணி என்ற இருவர் காயமடைந்தனர். இதில் சுப்பிரமணி சிகிச்சை பலன் இன்றி இன்று இறந்தார்.

இதையடுத்து தியேட்டர் உரிமையாளர் நடராஜன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். பழனிசாமிக்கு பழனி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே பிரச்சனைக்குரிய அந்த நிலத்தில் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன.