உலகம்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சுமார் 27 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த crew dragon விண்கலம், 4 விஞ்ஞானிகளுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது.

அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த மூன்று பேர், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஒருவர் என 4 விண்வெளி வீரர்களுடன் ஞாயிறு இரவு 7.27 மணிக்கு ஸ்பேஸ் எக்சின் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

புவிவட்டப்பாதையை சென்றடைந்ததும் தங்களுக்கு வசதியான உடைகளை அவர்கள் அணிந்ததுடன், இரவு உணவையும் உட்கொண்டனர்.

சுமார் 27 மணி நேர பயணத்திற்குப் பின் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.