இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று 6 புள்ளி 3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
புவிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாகவும், நிலநடுக்க மையத்தில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவு வரை அதிர்வை உணர முடிந்ததாகவும் இந்தோனேசியப் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.